Header Ads

இனி அலுமினிய ஐபோன் வராது! இனிமேல் கண்ணாடி ஐபோன் தான்!


அப்பிள் நிறுவனம் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ள ஐபோன் 7, என்ற புதிய வகை போனின் வெளித்தோற்றம் அலுமினியத்துக்கு பதிலாக முழுவதும் கண்ணாடியால் கவரப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். புதிய ஐபோன் எப்போது வெளியாகும் என அதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். வரும் 2017ம் ஆண்டு ஐபோனின் புதிய மொடலான ஐபோன் 7 வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஐபோன் 7 பற்றி தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவந்த பெரும்பாலான ஐபோன்-களின் Casing எனப்படும் வெளி உரை அலுமினியத்தால் தான் செய்யப்பட்டிருக்கும். கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 6 மற்றும் 6S ஆகியவற்றிலும் அலுமினியமே பயன்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள ஐபோன் 7-ல் அலுமினியத்துக்கு பதிலாக கண்ணாடி பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளது. ஆனாலும், கண்ணாடியால் போனின் வெளி உரை செய்யப்பட்டால் அது உடையும் அபாயம் அதிகம் உள்ளது என்பதால் எப்படி இதனை அப்பிள் சாத்தியமாக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியான ஐபோன் 4 மற்றும் 4S ஆகிய மொடல் போன்-களில் பேனல்கள் கண்ணாடியில் தான் செய்யப்பட்டது. ஆனால் நாளடைவில், பயனர்கள் பலரிடம் இருந்தும், போன் கீழே விழும் போது எளிதில் உடைந்து விடுவதாக எழுந்த புகார்களால் அது அப்போது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.