Header Ads

தெறி தெறிக்கவிடும் 10 காரணங்கள்


theri_treat001தெறி படம் இதுவரை வேறு எந்த படத்திற்கு இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக நாளை வரவிருக்கின்றது. தமிழகத்தில் கிட்டத்தட்ட இப்படம் 550 திரையரங்கில் வரவுள்ளது.இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் இந்த நேரத்தில், தெறியை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள் இதோ உங்களுக்காக….
1)இளைய தளபதி விஜய் முதன் முதலாக இயக்குனர் அட்லீயுடன் கைக்கோர்கிறார் என்பதை தாண்டி, நீண்ட இடைவேளைக்கு பிறகு 20+ வயது இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2)தெறியில் சில தினங்களுக்கு முன் விஜய்யின் மகள் நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்யின் மகனும் இப்படத்தில் நடிப்பது தற்போது தெரிந்துள்ளது.
3)90களில் கொடிக்கட்டி பறந்து மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் கலக்கியுள்ளாராம், இவருடைய நடிப்பு தான் படத்தின் மிகப்பெரிய ஹைலேட்.
4)இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் இந்த தெறி என்பது குறிப்பிடத்தக்கது.
5)கத்தி வெற்றியை தொடர்ந்து விஜய்-சமந்தா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் தெறி.
6)இளைய தளபதி விஜய் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோசப் குருவிலா, விஜயகுமார், தர்மேஷ்வர் என மூன்று விதமான கெட்டப்புகளில் மிரட்டவுள்ளார்.
7)விஜய் இப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் 100 அடி உயரத்தில் டூப் இல்லாமல் குதித்து அசத்தியுள்ளாராம்.
8)இதுநாள் வரை ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போன மொட்டை ராஜேந்திரன் இப்படத்தில் படம் முழுவதும் காமெடியில் கலக்கவுள்ளாராம்.
9)ஏற்கனவே டீசர், ட்ரைலர் இந்திய அளவில் சாதனை படைத்தது, இதனாலே இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு ஜெட் வேகம் தான்.
10)இவை அனைத்தையும் விட விஜய்யின் கடைசி ரிலிஸான புலி எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், இந்த படத்தில் இறங்கி அடிக்க தளபதி ருதரதாண்டவம் ஆடியுள்ளார். மேலும், புலி பதுங்கியது தற்போது பாய்வதற்கு தான்.என்ன தெறி படம் பார்க்க நீங்கள் ரெடியாகிவிட்டீர்களா…..!.

No comments:

Powered by Blogger.