VICTORIA POLICE என்கிற ஆஸ்திரேலிய அரசாங்கத்தினர் தனது படைப்பிரிவில் பல்லின மக்களைச் சேர்த்துக்கொள்வதில் பற்றுறுதி கொண்டுள்ளதுடன், காவல் உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இப்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் Police Custody Officer பணிக்கான அறிவிப்புகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒன்றும் அவ்வளவு பெரிய அறிவிப்பு இல்லையே என்று பலர் நினைக்க கூடும் . மேலும் ஆஸ்திரேலிய காவல் துறை பணி என்றால் அதற்கும் இந்தியறுக்கும் சமந்தமில்லையே என்றும் நினைக்கலாம். இவை அனைத்திற்கும் ஒரே பதில் என்னவென்றால் இந்த அறிவிப்புகள் தமிழில் வெளியிடப்பட்டிருப்பதுதான் . ஆம் இந்த அறிவிப்புகள் உலகின் சில முக்கிய மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன . அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது உலகளாவிய மொழிகளில் தமிழ் மொழியானது தலைநிமிர்ந்து நிற்பதைக் காட்டுகிறது. ஆங்கிலத்தை மட்டுமே முழுவதுமாக தாய்மொழியாகவே கொண்ட ஆஸ்திரேலிய நாட்டினரே தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமையைச் சேர்க்கும் விதமாக உள்ளது
No comments:
Post a Comment